துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Saturday, September 10, 2011

பெல்ஜியம் - யுனெஸ்கோ புராதான சின்ன மையம் - ப்ருக்கீ

பெல்ஜியம்
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
ப்ருக்கீ
(Read original article in : Brugge)



'ப்ருக்கீ
Author: Markdhammond (Creative Commons Attribution ShareAlike 3.0)


பிரென்ச் (French) மொழியில் 'ப்ருக்கேச்ஸ்' (or Bruges in French) அல்லது 'ப்ருக்கீ ' எனப்படும் இடம் யுனெஸ்கோவின் புராதான சின்ன மையமாக (UNESCO World Hertage Site) ஏற்றுக் கொள்ளப்பட்ட இடம். 2000 ஆம் ஆண்டு நவம்பர் (November) மாதம் 27 ஆம் தேதி முதல் டிசம்பர் (December) மாதம் 2 ஆம் தேதி வரை நடைபெற்ற உலக புராதான சின்ன அமைப்பின் அங்கத்தினர் (World Heritage Committee ) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.முட்டை வடிவில் (oval in shape) சுற்றிலும் உள்ள வாய்கால்களுக்கு இடையே (Canal) அமைந்து உள்ள இந்த இடம் 410 ஹெக்டயர் பரப்பளவில் உள்ளது. அதை சுற்றி 168 ஹெக்டயர் வெற்றிடமும் உள்ளது.
இந்த இடம் மத்திய கால ஓவியங்கள், கோத்திக் கட்டிடக் கலையில் அமைக்கப்பட்டு உள்ள வீடுகள், வியாபார மற்றும் கலாசாரத்தின் மாற்றங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய நிலையில் ஐரோபியாவின் மத்தியக் கால கட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த இடம் அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும் 'ஜான் வான் ஐக்' (Jan van Eyck) மற்றும் 'ஹான்ஸ் மேம்ப்ளிங்' ( Hans Memling)போன்ற ஓவியர்கள் வரைந்த ஓவியங்களுக்கு வழிகாட்டியாக இருந்த மத்தியக் காலத்தை சேர்ந்த ப்லேமிஷ் பண்டை கால ஓவியக் கலையை (Flemish Primitives art style) பிரதிபலிக்கும் வகையிலும் சித்திரங்களைக் கொண்ட கட்டிடங்கள் உள்ளன. ஆகவே அவை அனைத்தையும் கருத்தில் கொண்டே இந்த இடத்தை யுனெஸ்கோ புராதான சின்ன மையமாக அங்கீகரித்தார்கள்.

டவுன் ஸ்கொயர்
Author: Horst (Creative Commons Attribution 2.0)



ப்ருக்கீ டவுன் ஸ்கொயர்
Author: DiaBaBurMElha (Creative Commons Attribution ShareAlike 3.0)



ப்ருக்கீ மணிக் கூண்டு கோபுரம்
Author: L. Ellis (Creative Commons Attribution 1.0)



ப்ருக்கீ டவுன் ஹால்
Author: Armont (public domain)

 
ப்ருக்கீ தேவாலயங்கள்
Author: Lin ChangChih (public domain)



செயின்ட் சல்வடார் மாதா கோவில்
Author: Wolfgang Staudt (Creative Commons Attribution 2.0)



சின்ட் -அன்னகேர்க் தேவாலயம் 
Author: Wolfgang Staudt (Creative Commons Attribution 2.0)



ஜெருசலேம்கேர்க் தேவாலயம் 
Author: LimoWreck (Creative Commons Attribution ShareAlike 3.0)



ஹெய்லிக் ஹர்த்கேர்க் தேவாலயம் 
Author: LimoWreck (Creative Commons Attribution ShareAlike 3.0)

 
ப்ருக்கீ யின் மத்தியக் கால நுழை வாயில்
Author: Marc Ryckaert (Creative Commons Attribution ShareAlike 2.5)



க்ரூஸ்பூர்ட்- உள் பக்கத்தில் இருந்து
காணப்படும் ப்ருக்கீயின் தோற்றம்

Author: Ph.winy (Creative Commons Attribution ShareAlike 3.0)



வெளிப்புறத்தில் இருந்து காணப்படும் க்ரூஸ்பூர்ட்டின் தோற்றம்
Author: Wolfgang Staudt (Creative Commons Attribution 2.0)


ஓல்ட் லேடி தேவாலயத்தின்
பக்கத்தில் ப்ருக்கீயின் சாலை

Author: Wolfgang Staudt (Creative Commons Attribution 2.0)



ட்வீர்ஸ்டார்ட்
Author: Ellywa (Creative Commons Attribution ShareAlike 3.0)


 
ப்ருக்கீயை சுற்றி  வாய்கால்
Author: Elke Wetzig (Creative Commons Attribution ShareAlike 3.0)



ச்பிநோலரெய்  என்  ஸ்பிகேல்ரேய் வாய்க்கால்கள்
Author: Richardfabi (public domain)



ப்ருக்கீ வாய்க்காலின் இன்னொரு தோற்றம்
Author: Jean-Christophe BENOIST (Creative Commons Attribution ShareAlike 3.0)



ரோசன் ஹோத்காய் வாய்க்கால்  
Author: Jean-Christophe BENOIST (Creative Commons Attribution ShareAlike 3.0)


ப்ருக்கீயில் என்ன பார்க்கலாம்
(What to See in Historic Centre of Brugge)

(1) க்ரோயெனிங்கே மியூசியம்
(Groeninge Museum )
ப்ருக்கீயில் 14 முதல் 20 அம நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஓவியர்களின்  ஓவியங்களைக் கொண்ட மியூசியம்
(2) ஹெய்லிக் ப்ளுட் பேசிலேக் 
(Heilige Bloed Basiliek )
பர்க் மைதானத்தில் உள்ள ரோமன் தேவாலயம் - இங்கு வைக்கப்பட்டு உள்ள ஒரு குப்பியில்  ஏசு கிறிஸ்துவின் ரத்தம் உள்ளதாக கூறுகிறார்கள்.
(3) ஓன்சீ  லைவீ  வ்ரோவ்வேர்க் 
(Onze Lieve Vrouwkerk )
அவர் லேடி தேவாலயம் எனப்படும் இங்குதான் டியூக் சார்லஸ் போல்ட் (1433-1477) மற்றும் அவருடைய மகள் மேரி தி ரிச் (1457-1482) என்பவர்களின் கல்லறைகள் உள்ளன. 
(4) ஜெருசலேம் தேவாலயம்
(The Jerusalem Church )
இத்தாலியை சேர்ந்த ஜெனோவா என்பவர் கட்டிய  தேவாலயம்.  இது  ஜெருசலத்தில்  உள்ள  சர்ச்  ஆப்  தி  ஹோலி  செபுல்செர்   என்பதைப் போலவே கட்டப்பட்டு உள்ளது.

உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details )

உள்ள இடம்: N 51 12 32.076 E 3 13 30.972
அங்கீகாரம் பெற்ற வருடம் : 2000
பிரிவு : கலை
தகுதி : II, IV, VI

இந்த இடம் பெல்ஜியத்தின் (Belgium)  மேற்குக் கடற்கரைப் பகுதியில் நெதர்லாந் (Netherlands) எல்லையை தொட்டபடி உள்ளது. இங்கு செல்ல வேண்டும் எனில் நீங்கள் 'ப்ருச்சில்ஸ்சில்' (Brussils)  தங்கி இருக்க வேண்டும். 'ப்ருச்ஸ்சில்ஸ்'சிற்குச் சென்றப் பின் அங்கிருந்து ரயில் ஆல்லது பஸ் மூலம் இந்த இடத்துக்கு செல்லலாம். 'ப்ருச்சில்ஸ்சில்' சர்வதேச விமான நிலையம் (Brussils International Airport) உள்ளது.
ப்ருச்சில்ஸ்சில்  உள்ள ஹோடல்களைக் காண ஹோட்டல் மீது கிளிக் செய்யவும்

Thursday, September 1, 2011

பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் - யுனெஸ்கோ புராதான சின்ன மையம் : மணிக் கூண்டுகள்


 யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் நாட்டின் மணிக் கூண்டுகள்
(Read Original Article in :- Belfries of Belgium and France)
மேசெலேன் மணிக்கூண்டு கோபுரம் 
மணிக்கூண்டு (Belfries) கோபுரங்கள்  என்பது பெல்ஜியம் (Belgium) மற்றும் பிரான்ஸ் (France) நாடுகளின் இடையில் உள்ள பகுதிகளில் யுனெஸ்கோ புராதான சின்ன மையத்தினரால் ( UNESCO  World Heritage Site)  அங்கீகரிக்கப்பட்ட இடம்.  இதில் முதலில் பெல்ஜிய  (Belgium) நாட்டை சேர்ந்த  32 மணிக்கூண்டுகளை 1999 ஆம் ஆண்டு ப்லாண்டேர்ஸ் மற்றும் வால்லோனியாவில் (Flanders and Wallonia) யாவில் உள்ள மணிக்கூண்டு கோபுரம் என அங்கீகரித்தார்கள். அதன் பின் வடக்கு பிரான்ஸ் நாட்டுப் பகுதியில் 23  மணிக்கூண்டு  கோபுரங்களையும் பெல்ஜியத்தில்  உள்ள கேம்ப்லோக்ஸ் (Gembloux ) என்ற பகுதியில் இன்னொரு மணிக் கூண்டு கோபுரத்தையும் அங்கீகரிக்க இரண்டு நாடுகளிலும் உள்ள மொத்தம் 56 மணிக்கூண்டு கோபுரங்கள் அங்கீகாரம் பெற்றன.  
இந்த அங்கீகாரத்தை தென் ஆப்ரிக்காவின் (South Africa) டர்பனில் (Durban) 2005 ஆம் ஆண்டு  நவம்பர் (November)மாதம் 29 ஆம் தேதி முதல் டிசம்பர் (December) மாதம் 4 ஆம் தேதிவரை கூடிய  உலக புராதான மைய அங்கத்தினர்கள் (World  Heritage Committee ) கூடத்தில் முடிவு செய்யப்பட்டது.  
இப்படியாக அந்த மணிக் கூண்டு கோபுரங்கள் அங்கீகாரம் பெற்றதின் காரணம் அவை கட்டப்பட்டு உள்ள அந்த கால கட்டங்களில் விளங்கி இருந்த அரசியல் மற்றும் ஆன்மீக நிலையை (political and spiritual requirements) மனதில் கொண்டே அந்தக் கட்டிடக் கலை அமைக்கப்பட்டு இருந்தது.
பெல்ஜிய நாட்டின் சில மணிக் கூண்டு கோபுரங்களின்  விவரம் இவை:-
 ஆல்ஸ்ட் மணிக் கூண்டு கோபுரம்

 பிஞ்சே மணிக் கூண்டு கோபுரம்

 ப்ருக்கே மணிக் கூண்டு கோபுரம்

 கெண்ட் மணிக் கூண்டு கோபுரம்

  ஹீரேண்டல்ஸ்  மணிக் கூண்டு கோபுரம்

 ஹெச்டின்  டவுன்  ஹால் மணிக் கூண்டு கோபுரம்

 லிபேர்   மணிக் கூண்டு கோபுரம்

 கொர்த்ரிஜ்க் மணிக் கூண்டு கோபுரம்

  லியர் மணிக் கூண்டு கோபுரம்

 லோ -ரேனிங்கே மணிக் கூண்டு கோபுரம்

  நமூர் மணிக் கூண்டு கோபுரம்

ரோஏசிலாரே  மணிக் கூண்டு கோபுரம்

சின்ட் ட்ருயிடேன் மணிக் கூண்டு கோபுரம்

டைல்ட் மணிக் கூண்டு கோபுரம்

 பிரான்ஸ் நாட்டின் சில  மணிக் கூண்டு கோபுரங்கள் 

ஐரி-சு-ல-லைஸ் மணிக் கூண்டு கோபுரம்
Author: Armont (public domain)

  பியுலியூ -சூர் -டோர்டோக்னே மணிக் கூண்டு கோபுரம்

  பௌலோகின் மணிக்கூண்டு கோபுரம்

லூஸ் மணிக் கூண்டு  கோபுரம்

     லுசெக்ஸ் மணிக்கூண்டு கோபுரம்

   ரூ மணிக் கூண்டு கோபுரம்


பிரான்ஸ் மற்றும் பெல்ஜிய
மணிக்கூண்டு கோபுரங்களில் என்ன பார்க்கலாம்
(What to See in the Belfries of Belgium and France )

பிரான்ஸ்சின் பலாண்டேர்ஸ்சில் (Flanders) கீழ் கண்ட இடங்களில் உள்ள மணிக் கூண்டு கோபுரங்கள் 1999 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டன
(1) அலாஸ்ட்/ அலோஸ்ட் 
( Aalst/Alost)
(2) அன்ட்வேர்பேன் / அன்வேர்ஸ்
(Antwerpen/Anvers)
(3) ப்ருக்கே / ப்ருகேஷ் 
(Brugge/Bruges)
(4) டென்டேர்மோன்டே / டேர்மோன்டி  
(Dendermonde/Termonde)
(5) டிக்ஸ்முய்டி/ டிக்ஸ்முடி 
(Diksmuide/Dixmude)
(6) இக்லோ
( Eeklo)
(7) கென்ட் / கான்ட்
(Gent/Gand)
(8) ஹீரேன்டால்ஸ்
(Herentals)
(9) லேபர் / எப்ரேஸ் 
(Ieper/Ypres)
(10) கொர்த்ரிஜ்க் /கௌர்ட்ரை 
(Kortrijk/Courtrai)
(11) லியர் / லியரி 
(Lier/Lierre)
(12) லியூவேன் /லவ்வேன்
(Leuven/Louvain)
(13) லோ-ரினிங்கே  
(Lo-Reninge)
(14) மேசிளேன் / மலின்ஸ்
(Mechelen/Malines)
(15) மேனின் / மினின் 
(Menen/Menin)
(16) நியூபூர்ட்/ நியூபோர்ட்
(Nieuwpoort/Nieuport)
(17) ஓவ்டினார்டே / அவ்டினார்டே
(Oudenaarde/Audenarde)
(18) ரோசெல்லாரே /ரௌவ்லேர்ஸ்
(Roeselare/Roulers)
(19) சின்ட் ட்ருயிடேன்/செயின்ட் ட்ரோன்ட்
( Sint-Truiden/Saint-Trond)
(20) டை ல்ட்
(Tielt) 
(21) டைனேன் /திர்லிமோன்ட்
(Tienen/Tirlemont)
(22) டோன்கிரேன்/ டோங்றேச்ஸ்     
(Tongeren/Tongres)
(23) வியூர்னி / புர்னிஸ்
( Veurne/Furnes)
(24) சவ்ட்டில்யூ / லியாவ் 
(Zoutleeuw/Léau)
பெல்ஜியத்தின் வால்லோனியாவில்  (Wallonia) கீழ் கண்ட இடங்களில் உள்ள மணிக் கூண்டு கோபுரங்கள் 1999 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டன
(1) பின்சீ
( Binche)
(2) சார்லிரோய்
( Charleroi)
(3) மோன்ஸ்
(Mons)
(4) நமூர்
(Namur)
(5) துயின்
(Thuin)
(6) டௌர்னை
(Tournai)

2005 ஆம் ஆண்டு பிரான்ஸ்சின் கீழ் கண்ட இடங்களில் உள்ள மணிக் கூண்டு கோபுரங்கள்  அங்கீகரிக்கப்பட்டன
(1) ஆர்மேண்டைர்ஸ்
(Armentières)
(2) பேல்லியுல்
(Bailleul)
(3) பெர்குஸ்
(Bergues)
(4) கேம்ப்ரை
(Cambrai)
(5) கோமைன்ஸ்
(Comines)
(6) தூவாய்
(Douai)
(7) டன்கேர்கியூ
( Dunkerque )
(8) க்ரேவிலைன்ஸ்
(Gravelines)
(9) லில்லி
(Lille)
(12) லூஸ்
(Loos)
(13) ஐரி-சு-ல-லைஸ்
(Aire-sur-la-Lys)
(14) அராஸ்
(Arras)
(15) பெதுன்
(Béthune)
(16) பௌலோகின் -சூர்-மேற்
(Boulogne-sur-Mer)
(17) கலைஸ்
(Calais)
(18) ஹெஸ்டின்
 (Hesdin)
(19) அப்பிவில்லி 
(Abbeville)
(20) அமின்ஸ்
 (Amiens)
(21) டௌலென்ஸ்
( Doullens)
(22) லுசெக்ஸ்
(Lucheux)
(23) ரூ மற்றும் செயின்ட் -ரிகுய்யர்
(Rue and Saint-Riquier)
2005 ஆம் ஆண்டு பெல்ஜியத்தின் வால்லோனியாவின் ஜெம்ப்லோக்ச்ஸ் (Gembloux )என்ற இடத்தின்  உள்ள மணிக் கூண்டு கோபுரமும் அங்கீகரிக்கப்பட்டன .
அங்கீகரிக்கப்பட்டுள்ள மணிக் கூண்டுகளின் இடங்களைக் காண இங்கு கிளிக் (Click here to view location of the belfries on map) செய்யவும்.

உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details )

உள்ள இடம் : N 50 10 28 E 3 13 53 
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 1999, Extension: 2005
பிரிவு : கலை
தகுதி : II, IV

மணிக் கூண்டுகள் உள்ள இடங்களுக்கு 'செல்ல வேண்டுமா
( Visiting the Belfries of Belgium and France )
 நீங்கள் இந்த இடத்துக்குச் சென்று பார்க்க வேண்டும் என்றால் 'ப்ருச்சில்ஸ்சில்' (Brussils) தங்கிக் கொள்ளலாம். 'ப்ருச்சில்ஸ்' நகரில் தங்கும் இடங்களை முன் பதிவு செய்து கொள்ள ஹோடேல்ஸ் என்ற இதன் மீது (hotels in Brussels) கிளிக் செய்யவும்.

பெல்ஜியம் -- யுனெஸ்கோ புராதான சின்ன மையம் : 'கனால் டியூ சென்டர்

பெல்ஜியம்
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
'கனால் டியூ சென்டர்
(Read Original Article in :- Canal du Centre)
 
'கனால் டியூ சென்டரில்' (Canal du Centre) படகுத் தூக்கிகள் (Lifts) கனால் டியூ சென்டரில் 19 ஆம் நூற்றாண்டை சேர்ந்த நான்கு பராமரிக்கப்பட்டு வந்துள்ள நான்கு படகுத் தூக்கிகள் 'லா லவ்விரி' (La Louviere ) மற்றும் 'லீ ரோலெக்ஸ்' (Le Roeulx) என்ற இடங்களில் உள்ளன. 'பெல்ஜியத்தில்' (Belgium) உள்ள 19 அல்லது 20 ஆம் நூற்றாண்டுகளில் முதலில் கட்டப்பட்டு இருந்த எட்டு படகுத் தூக்கிகளைப் போன்றது இந்த நான்கு படகுத் தூக்கிகள்.1998 ஆம் ஆண்டு 30 நவம்பர் (November) முதல் டிசம்பர் (December) 5 ஆம் தேதிவரை நடைபெற்ற ஜப்பான் (Japan)நாட்டின் 'க்யெடோ' (Kyato) என்ற இடத்தில் கூடிய உலக புராதான சின்ன மைய அங்கத்தினர் (World Heritage Committee) கூட்டத்தில் இந்த கனால் மற்றும் அதன் கட்ட ஸ்தான அமைப்புக்களை யுனெஸ்கோ உலக புராதான சின்னமாக (UNESCO World Heritage Sites ) அங்கீகரித்தார்கள். இந்த நான்கு படகுத் தூக்கிகளும் அவற்றின் பொறியியல் தொழில் நுட்பத்திற்காக (engineering technology) பாராட்டைப் பெற்றன.
நான்கு படகுத் தூக்கிகளும் அவற்றுடன்
உள்ள பாதுகாப்பு பூட்டுக்களும்
Author: Karel Roose (public domain)
 
ஹௌடேங் -ஐமேரீஸ் போட் லிப்ட்
Author: LimoWreck (Creative Commons Attribution ShareAlike 3.0)

ஹௌடேங் -கோஎக்னீஸ் போட் லிப்ட்
Author: Jean-Pol Grandmont (Creative Commons Attribution ShareAlike 2.5)

இந்த இடத்தில் என்ன பார்க்கலாம்
(What to See in Four Lifts on the Canal du Centre )

நான்கு படகுத் தூக்கிகள் 'லா லவ்விரி'யில் உள்ளன. இவற்றின் மூலம் 'கனால் டியூ சென்டரில்' மியூஸ் நதி ஆற்றுப் பள்ளத்தாக்கில் Meuse river) இருந்து ஷெல்ட் (Schelt river) நதி வரையிலான பாதையில் படகுகள் ஏழு கிலோ மீட்டர் தூரம் செல்ல முடிகின்றது. இந்த இரண்டு நதிகளுக்கும் இடையிலான உயரம் 66.2 மீட்டர் வித்தியாசத்தில் உள்ளது. ஆகவே முதலாம் படகு தூக்கி 15.4 மீட்டர் உயரத்தில் படகுகளுக்கு உதவுவதற்காக , was opened at ஹௌதேங் -கோஎக்னீஸ்சில் 1988 ஆண்டு அமைக்கப்பட்டது . மற்ற மூன்று படகு தூக்கிகளும் 1917 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஒவ்வொன்றும் 16.93 மீட்டர் உயரத்தில் தூக்க உதவுகின்றன. படகு தூக்கிகளில் இரண்டு காற்றுப்பெட்டி (caissons) உள்ளன .ஒன்றில் தண்ணீர் நிரம்பியதும் அது மேலெழும்ப மற்ற முனை கீழ் இறங்கும். இந்த சாதனத்தை பிரிட்டிஷ் ( British ) நாட்டை சேர்ந்த கிளாக் மற்றும் ஸ்டான்ஸ்பில்ட் & கிளாக் (Clack, Stansfield & Clack.) என்ற வணிக நிறுவனம் தயாரித்தது.

உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details )

இருப்பிடம் : N 50 28 51.996 E 4 8 13.992
அங்கீகாரம் பெற்ற வருடம் : 1998
பிரிவு : கலை
தகுதி : III, IV

'கனால் டியூ சென்டர் 'செல்ல வேண்டுமா
(Visiting Canal du Centre )

நீங்கள் இந்த இடத்துக்குச் சென்று பார்க்க வேண்டும் என்றால் 'ப்ருச்சில்ஸ்சில்' (Brussils) தங்கிக் கொள்ளலாம். 'ப்ருச்சில்ஸ்' நகரில் தங்கும் இடங்களை முன் பதிவு செய்து கொள்ள ஹோடேல்ஸ் என்ற இதன் மீது (hotels in Brussels) கிளிக் செய்யவும். ப்ருச்சில்ஸ் சில் இருந்து இந்த இடத்துக்கு செல்ல 30 நிமிடங்களே ஆகும். நீங்கள் வாகனத்தில் சென்றால் E19 சாலையில் தெற்கு நோக்கிச் செல்லவும்.

Wednesday, August 31, 2011

பெல்ஜியம் - யுனெஸ்கோ புராதான சின்ன மையம் : ப்ளெமிஷ் பெகுநேஜெஸ்

பெல்ஜியம்
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்

ப்ளெமிஷ் பெகுநேஜெஸ்
(Read Original Article in :- Flemish Béguinages ) 


'ப்ளெமிஷ் பெகுநேஜெஸ்' என்பவர்கள் பெல்ஜியத்தில் (Belgium) கன்னி மாடத்தை சேர்ந்த பெண்கள். அவர்கள் கணவரை யுத்தத்தில் இழந்தவர்கள், திருமணம் ஆகாமல் தெய்வ  சேவையை செய்து கொண்டு இருந்த கன்னிகள். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு சமூகத்தினர் போல ஒரே இடத்தில் அமைதியாக வாழ்ந்தார்கள். அவர்களை 'டட்ச்' (Dutch) மொழியில் 'பெகிஜ்ஹோப்' (Begijnhof) என்று கூறுவார்கள். 13 ஆம் நூற்றாண்டில் கடவுள் சேவைக்கு தம் வாழ்கையை அர்பணித்துக் கொண்ட ரோம கத்தோலிக்க மகளினர் (Roman Catholic women) இதைத் துவக்கினார்கள்.  அவர்கள் வாழ்ந்து வந்த வீடுகள், வேலை செய்யும் இடங்கள், தேவாலயங்கள் போன்ற அனைத்து இடங்களுமே சீரிய முறையில் பராமரிக்கப்பட்டு வந்தன. அவைகளே இன்று யுனெஸ்கோ புராதான சின்ன மையமாக ( UNESCO World Heritage Site ) 1991 ஆம் ஆண்டு நவம்பர் (November) 30 ஆம் தேதி முதல் டிசம்பர் (December) மாதம் 5 ஆம் தேதி வரை கூடிய உலக புராதான சின்ன மைய (World Heritage Committee ) அங்கத்தினர் கூடிய கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது
இந்த அங்கீகாரத்துக்குக் காரணம் அந்த இடங்களின் 'ப்ளெமிஷ்' கலாச்சாரத்தில் (Flemish cultural) கட்டப்பட்டு இருந்த அற்புதமான கட்டிடக் கலை மற்றும் அதன் அமைப்புக்களே. மேலும் ஐரோப்பியாவில் (Europe) மத்திய காலத்தில் (Middle Ages) வாழ்ந்த , தமக்கென ஒரு தனிக் கலாச்சாரத்தை (independent cultural Tradition) ஏற்படுத்திக் கொண்டு இறை வழி சேவை புரிந்து வந்தப் பெண்கள் (Religious) மதசார்பற்ற (Secular), அதே சமயத்தில் பண்டைய கலாசாரத்தில் அந்தக் கட்டிடங்களை அமைத்து வாழ்ந்து கொண்டு இருந்ததுதான்.

அன்ட்வேர்ப்பில் பெகுநேஜெஸ்
Author: frank wouters (Creative Commons Attribution 2.0)

டீஸ்ட்டில்  பெகுநேஜெஸ்
Author: Athenchen (Creative Commons Attribution ShareAlike 3.0)

ஓட்னார்டேயில் ப்ளெமிஷ் பெகுநேஜெஸ் 
Author: LimoWreck (Creative Commons Attribution ShareAlike 3.0)

'பெகுநேஜெஸ்சில்' என்ன பார்க்கலாம்
( What to See in Flemish Béguinages )

'பெல்ஜிய'த்தில் 'அன்த்வேர்ப்' (Antwerp), 'ப்ரெகேஷ்' (Bruges), 'டென்டேர்மோண்டி' (Dendermonde), 'டைஸ்ட்' (Diest), 'கெண்ட்' (Ghent), 'ஹேஸ்சல்ட்'(Hasselt), 'ஹூக்ஸ்ராடேன்' (Hoogstraten), 'லையர்' (Lier), 'லியூவேன்' (Leuven), 'மேச்சிலேன்' (Mechelen), 'கோர்த்ரிஜ்க்' (Kortrijk), 'சின்ட் த்ரைடேன்' (Sint-Truiden), 'துர்ன்ஹவுட்' (Turnhout), மற்றும் 'டோங்கேறேன்' (Tongeren) போன்ற இடங்களில் 'பெகுநேஜெஸ்' கட்டிடங்களைக் காணலாம். அங்கெல்லாம் யுத்தங்களில் மடிந்து போன கணவனை இழந்த பல இளம் பெண்கள் (Widows) , மத்திய காலத்தில் இருந்த பல மணமாகாத பெண்கள் (Unmarried women) போன்றவர்களை சமூகம் தள்ளி வைத்தபோது 'பெகுநேஜெஸ்' எனப் பெயர் கொண்ட அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தமக்கென தனி இடங்களை அமைத்துக் கொண்டு (dwellings for themselves) ஒரு குடும்பமாக வாழ்ந்தார்கள்.
'பெகுநேஜெஸ்' என்ற கூட்டு சமூகத்தினர் தம் இருப்பிடங்களில் வீட்டோடு சேர்ந்த முற்றம் (Courtyard ) தாம் இருந்த மொத்தப் பகுதியையும் சுற்றி அரண் போல சுவர்களை எழுப்பி வைத்துக் கொண்டு தம்மை பாதுகாத்துக் கொண்டார்கள். அந்த இடத்திற்குள் நுழைய இரண்டு அல்லது மூன்று கதவுகள் அந்த பாதுகாப்பு சுவர்களில் அமைந்து இருந்தன.

உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details)

இருப்பிடம் : N 51 1 51.5 E 4 28 25.5
அங்கீகாரம் பெற்ற வருடம் : 1998
பிரிவு : கலை
தகுதி : II, III, IV

'ப்ளெமிஷ் பெகுநேஜெஸ்' செல்ல வேண்டுமா
(Visiting Flemish Béguinages)

நீங்கள் இந்த இடத்துக்குச் சென்று பார்க்க வேண்டும் என்றால் 'ப்ருச்சில்ஸ்சில்' (Brussils) தங்கிக் கொள்ளலாம். 'ப்ருச்சில்ஸ்' நகரில் தங்கும் இடங்களை முன் பதிவு செய்து கொள்ள ஹோடேல்ஸ் என்ற இதன் மீது (hotels in Brussels) கிளிக் செய்யவும்.